புதிய வரி தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளியான நற்செய்தி
உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு சுமையாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் 10% பணக்காரர்களுக்கு மட்டுமே அந்த வரி விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் தேவை
எனவே இந்த வரி தொடர்பில் சாதாரண மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வரிக்கு உட்பட்ட 10% மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள் ஏனைய 90% மக்களின் தேவைக்கே செலவிடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என நேற்று ரணில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |