பொய் சொல்லும் டிரம்ப் - ஹோர்முஸ் எந்த நேரத்திலும் மூடப்படும் - ஈரான் கடும் சீற்றம்
ஈரான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய ஏழு கூற்றுகளும் “பொய்யானவை” என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை“திறந்திருக்காது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனிய கை இருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "நெருங்கிவிட்டன" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ஈரான் சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் விலைகள்
லெபனானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இணங்க ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழித்தடத்தில் போர் நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தும் முழுமையாகத் திறக்கப்படுவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக திறக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனாலாட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் அவர் வெளியிட்ட truth social பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வர்த்தகப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதிப்பதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து எண்ணெய் விலைகள் சரிந்தன. அதேவேளையில் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டின.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20