ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெறப்போகும் அமெரிக்கா
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா பெறும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஹோர்மூஸ் மீதான தடை நிறைவுக்கு வந்த நிலையில் அவர் வெளியிட்ட சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது B2 குண்டுவீச்சு விமானங்களால் உருவாகும் அணு தொடர்பான “தூசி” அனைத்தையும் பெறும் என இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா பிரச்சினை
இந்த செயல்முறையில் எந்தவிதமான பண பரிவர்த்தனையும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏற்பாடு லெபனானுடன் தொடர்புடையதல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ள அவர், அமெரிக்கா தனிப்பட்ட முறையில் லெபனானுடன் இணைந்து ஹிஸ்புல்லா பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் லெபனானுடன் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல, ஆனால் நாம் லெபனானை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம் எனவும் கூறியுள்ளார்.
இதனுடன், இஸ்ரேல் இனி லெபனானில் குண்டுவீச்சு நடத்தாது என்றும், அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி பாகிஸ்தான்
“போதும் என்பது போதும்,” என அவர் வலியுறுத்தியதுடன், அனைத்துக்கும் நன்றி என கூறியுள்ளார்.
மேலும் தனது சமூக ஊடக பதிவில் மத்தியகிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பெரும் வீரத்திற்கும் உதவிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாகிஸ்தானுக்கும் அதன் மாபெரும் பிரதமர் மற்றும் ஃபீல்ட் மார்ஷலுக்கும் நன்றி, இரு அற்புதமான மனிதர்கள் என்றும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |