காவல்துறைக்கு எதிராக முறைப்பாடு அளிக்க ஏற்பாடு
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Jaso
காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு அளிக்க விரும்பினால் 118 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி இலக்கம் பொது பாதுகாப்பு அமைச்சகத்தால் பராமரிக்கப்படுகிறது.
புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை
இந்த எண்ணுக்கு பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்தார்.

விமர்சனங்களை அடுத்து
அண்மைக்காலமாக காவல்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களை அடுத்து பொதுபாதுகாப்பு அமைச்சு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்