பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகப் பிரிட்டன் அமைப்பு அறிக்கை

Pakistan World
By Pavi Oct 31, 2026 12:25 AM GMT
Report

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களது பூர்வீகச் சொத்துகள் பறிக்கப்படுவதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த 'இன்சைட் யு.கே.' (INSIGHT UK) என்ற அமைப்பு, பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தற்போதைய பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்துக்கள் 14.60 சதவீதமாக இருந்தனர்.

ஓமான் கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்: 25 பணியாளர்கள் மீட்பு

ஓமான் கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்: 25 பணியாளர்கள் மீட்பு

கடுமையான பொருளாதார நெருக்கடி

எனினும், 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, தற்போது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டுத் துன்புறுத்தப்படுவதாகப் பிரிட்டன் அமைப்பு அறிக்கை | Report Insight Uk Persecution Hindus Pakistan

மேலும், பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பண்ணைகள், 'எதிரி சொத்துச் சட்டங்களின்' (Enemy Property Laws) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வறுமையையும் எதிர்கொள்வதுடன், தங்களது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

நச்சுக்காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரை பறித்த வெளிநாட்டு பெண்: விதிக்கப்பட்ட தண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023