காவல்துறை தலைமைக்கு பறந்த முக்கிய அறிக்கை!
அச்சுறுத்தல்கள் காணப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த அறிக்கை பதில் காவல்துறை மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அறிக்கையை புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, தொடர்புடைய அறிக்கை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளில் பணிபுரியும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளமையை கருத்தில் கொண்டு, தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிகாரிகளின் எண்ணிக்கை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை, அக்மீமன தலகஹா பகுதியில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
23 மணி நேரம் முன்