அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை
நெல் இருப்புக்கள் மற்றும் அரிசி இருப்புக்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையானது இன்று (06) கையளிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் (Hemantha Samarakon) தெரிவித்துள்ளார்.
நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணிகள்
இதனடிப்படையில், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் தகவல், வர்த்தக அமைச்சக செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆலை உரிமையாளர்கள்
அத்தோடு, பத்து மாவட்டங்களில் உள்ள ஆலை உரிமையாளர்கள் கையிருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், அடையாளம் காணப்பட்ட ஏனைய மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அமைச்சு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |