அஜித் ரோஹணவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்! பொலிஸ் தலைமையகம் வழங்கிய பதில்
Corona
Police
Ajith Rohana
SriLanka
By Chanakyan
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹணவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் போலியானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் அவரின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய் தினம் சில ஒளிப்படங்களும் காணொளியும் சமூக வலைப்பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி