ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் (Marc-André Franche)இற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று(15) கொழும்பில் இடம்பபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடப்படாமையை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
தரவுகளுடனான ஆவணம்
குறித்த விடயத்தை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்வதாக ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளமை தொடர்பில் தரவுகளுடனான ஆவணமொன்றை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதியிடம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.