பொறுப்புடன் செயற்படுங்கள் - இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை
covid
sri lanka
Asela Gunawardana
By Vanan
இலங்கையில் மாகாண எல்லைகள் திறக்கப்பட்டு ஏனைய கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களை பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன (Asela Gunawardana) கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்துவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை முகாமைப்படுத்திக்கொள்ளும் முகமாக இன்றுடன் மாகாணங்களுக்கு இடையிலான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்த நிலையில் சுற்றுலா மற்றும் யாத்திரை செல்வதற்கு இது உரிய தருணம்
அல்ல என்று அசேல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.