பரீட்சைக்குத் தோற்றும் உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Students
sriLanka
Advance level
Exam Deparments
By Chanakyan
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.
பரீட்சைகள் நடைபெறும் அனைத்து தினங்களிலும், காலை 8:30இற்கு பரீட்சைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், வெள்ளிகிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை வேளைகளில் பிற்பகல் 1 இற்கு (13:00) பரீட்சைகள் ஆரம்பமாகும்.
வெள்ளிகிழமைகளில் மாத்திரம் பிற்பகல் 2 மணிக்கு (14:00) பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்