முல்லைத்தீவில் தொடருந்து கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடருந்து கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குளம் தொடருந்து நிலையத்துக்கும் முறுகண்டி தொடருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 302.6 கிலோமீற்றர் பகுதியில் தொடருந்து கடவை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டு தடவைகள் தொடருந்து திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன் உயிர் பயத்துடனேயே நடமாடவேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்த இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |