மட்டக்களப்பு கடல் பகுதியில் காணாமல் போன தந்தையும், மகனும் சடலங்களாக மீட்பு

Srilanka Missing Batticaloa Recovery of corpses Spinner
By MKkamshan Jan 18, 2022 03:53 AM GMT
Report

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம்(வயது 56) என்ற தந்தையும் அகிலவாசன் (21 வயது) மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் இருவரும் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் கரையை திரும்பாமல் நேரமாகியதால் சந்தேகம் கொண்டு உறவினர்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் சென்ற படகு தனிமையில் கடல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசத்தின் உள்ளுர் சுழியோடிகள் மற்றும் கல்குடா தியாவட்டவான் சுழியோடிகள் இணைந்து காலை முதல் மாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டு அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சடலங்களை மீட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று இருவரும் குறித்த காயான்கேணி கடல் பரப்பில் அதிக மீன் பிடியில் ஈடுபட்டு இலாபம் பெற்றுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் மீன் பிடிக்க மறுநாள் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடலில் காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் தாக்கம் காரணமாக படகில் இருந்த ஒருவர் தவறி கடலில் வீழ்ந்திருக்கலாம் என்றும் இதன்போது மற்றையவர் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சி இருவரது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் இருவரது மரணங்கள் பிரதேசத்தில் சோகத்தினை எற்படுத்தியுள்ளது.இதேபோன்று கடந்த பொங்கல் தினமன்று (14) கிரான் நாகவத்தை கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025