காட்டுப் பகுதியில் கேட்ட அழுகைச் சத்தம்- சுரங்கத்தில் இருந்து பெண் மீட்பு!
Srilanka
woman
Rescue
fell
abandoned tunnel
By MKkamshan
காலி - பத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
50 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கிராஃபைட் சுரங்கக் குழியில் விழுந்துள்ளதாகவும் தற்போது அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (19) காலை அம்பேகமவில் உள்ள புதர் காட்டுப் பகுதியில் இருந்து அழுகைச் சத்தம் கேட்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பத்தேகம காவல்துறை குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், 45 அடி ஆழமான கிராஃபைட் சுரங்கத்தின் அடிப்பகுதியில் பெண் சிக்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்