யாழ். போதனா வைத்தியசாலையின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராய்வு

Sri Lankan Tamils Jaffna Jaffna Teaching Hospital
By Kajinthan Jan 22, 2026 01:33 PM GMT
Report

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், நாடாளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் நேற்று விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

மேற்படி குழுக் கூட்டம் வைத்தியர் நிஹால் அபேசிங்கேவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

ஆளணி பற்றாக்குறை

இக் கூட்டத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் மற்றும் யாழ். மருத்துவ பீடாதிபதி குழுவினர் கலந்து கொண்டு, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

குறிப்பாக, ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு தீர்வாக, எதிர்வரும் காலங்களில் தேவையான சுகாதார ஊழியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வைக் குழு உறுதி அளித்துள்ளது.

மேலும், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட தற்போதைய ஆளணியை அதிகரிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, விரைவில் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் சதி :அம்பலப்படுத்திய அமைச்சர்

எதிர்க்கட்சிகளின் சதி :அம்பலப்படுத்திய அமைச்சர்

நான்காவது தேசிய வைத்தியசாலை

மேலும், இலங்கையில் உள்ள மூன்று தேசிய வைத்தியசாலைகளுக்கு அடுத்ததாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை நான்காவது தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது குறித்த தீர்மானமும் எடுக்கப்பட்டது.

இதற்காக தேவையான அடிப்படை ஆளணி அதிகரிப்பு மற்றும் சில முக்கிய சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, தேசிய வைத்தியசாலையாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறை, புதிய விடுதிகள் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, புதிய பத்து மாடி கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் வைத்தியசாலையின் சேவைகளுக்கான உபகரணங்கள் கொள்வனவு மற்றும் திருத்தப் பணிகளுக்கான நிதி விடுவிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026