நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று திர்மானம்!
Corona
Parliament
SriLanka
By Chanakyan
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இதன்படி சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ள தினம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்