மீள ஆரம்பிக்கப்படவுள்ள அநுராதபுர - ஓமந்தை புகையிரத சேவை
அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் ஓமந்தை இடையிலான புகையிரத பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.
இந்நிலையில், இந்தியக் கடன் உதவியின் கீழ் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதற்கமைய, குறித்த வீதியின் நிலைமை தொடர்பில் இன்று(13) அவதானிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் அதில் இணைந்து கொள்ள உள்ளார்.
கோட்டை - காங்கேசன்துறை புகையிரத சேவை
இந்த புகையிரத பாதையின் மறுசீரமைப்புடன் பல வழக்கமான புகையிரத பயணங்களை கோட்டை - காங்கேசன்துறை வரை நடத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மஹவ மற்றும் அநுராதபுரம் வரையான புகையிரத பாதையும் எதிர்காலத்தில் சீர்செய்யப்படவுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கான புகையிரத சேவையை நிறுத்த வேண்டியுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.