பருத்தித்துறையில் உணவகத்திற்கு வைக்கப்பட்டது சீல்
Jaffna
Sri Lanka Magistrate Court
Public Health Inspector
By Sumithiran
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு
அதன் போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூன்று உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , மன்றில் முன்னிலையான மூன்று உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து 37 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைக்குமாறும் கட்டளையிட்டது.

காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் - இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
