காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் - இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடி வருகின்றனர்.
காற்றாலை பொருட்கள்
இந்தநிலையில், நேற்று (26) இரவு மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலை பொருட்களை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றுள்ளது.
இதனால், குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது, காவல்துறையினர் மக்கள் மீது கொடுராமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பலர் படுகாயம்
இதையடுத்து, பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னனியில் 24 ஆம் திகதி ஜனாதிபதி மக்களின் எதிர்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
அமைதியான முறை
இந்த நிலையில் நேற்று (26) இரவு பத்து மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இருப்பினும், மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து, 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்டுள்ளனர்.
காவல்துறையினர்
இதன்போது, காவல்துறையினர் கொடூரமாக பெண்கள் மற்றும் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டுள்ளனர்.
அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் மற்றும் தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
