அபாயகரமான மாத்திரை பெருந்தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!
அபாயகரமான மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரும் மற்றொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம காவல்துறையினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பிரிகேபலின் (Pregabalin) வகையைச் சேர்ந்த 1,270 அபாயகரமான போதை மாத்திரைகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
ஓய்வுபெற்ற மருத்துவர்
கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மருத்துவர் 70 வயதுடையவர் என்பதோடு அவர் தற்போது எல்பிட்டிய பகுதியில் தனியார் வைத்தியர் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அததோடு மற்றைய சந்தேக நபர் 30 வயதுடையவர் என்றும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் பொருட்கள் கொண்டு சேர்ப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர் ஒருவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி இந்த ஔடதங்களை மருந்தகங்கள் மூலம் பெற முடியாது என்பதால் குறித்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில் இருந்து இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார்.
இதையடுத்து அவற்றை எல்பிட்டிய பகுதிக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மற்றும் மோட்டார் வாகனத்துடன் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |