ஓய்வு பெற்ற நீதிபதிபதியை இலக்கு வைத்து பாரிய இணையவழி மோசடி
சர்வதேச இணையவழி மோசடியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பட்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய நீதியதியிடம் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளது.
நீதிபதியின் வங்கி கணக்கு
தபால் திணைக்களத்தை சேர்த்தவர்கள் என குறித்த தரப்பு தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பின்னணியில் நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தெிவிக்கப்படுகிறது.
அதனை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டதும், மோசடி கும்பல் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுகின்றனர்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஒருவர் மருதானை தபால் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை எனவும் விழிப்புடன் இருக்குமாறும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விரிவடைந்த மோசடி
இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் துணை பணிப்பாளர், இந்த மோசடி வேகமாக விரிவடைந்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்க டொலர்கள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |