யாழில் அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
யாழில் (Jaffna), தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சடலமானது இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண விசாரணை
இந்த நிலையில், மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது பொருட்களை எடுப்பதற்கு வீட்டுக்கு வந்தவேளை குறித்த நபர் நிர்வாண நிலையில் வீட்டினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |