பாதிரியாரை கொலைசெய்யமுயலும் ஆயர்: தமிழர் தாயகத்தில் வலுவடையும் குற்றச்சாட்டுக்கள்!!
தன்னைக் கொலைசெய்யும் முயற்சியில் ஒரு ஆயர் ஈடுபட்டுவருவதாக ஒரு பாதிரியார் வெளியிட்டுள்ள கருத்து மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றது.
சமூக ஊடகங்களில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவருகின்றது.
குறிப்பிட்ட அந்தப் ஆயர் ஒட்டுக்குழு ஒன்றின் தலைவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருவதால் பாதிரியாரின் சந்தேகம் நியாயமானது என்றே கூறுகின்றார்கள் பொதுமக்கள்.
இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட பாதிரியார் அந்த ஆயருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
'விபத்தினை ஏற்படுத்தி தன்னைக் கொலைசெய்யும் வகையில் தனது வாகனத்தில் வேண்டும் என்றே சில குழறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்' அவர் அந்தக் கடிதத்தில் நேரடியாகவே ஆயர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
'உங்களுக்கு என்மீது கடுமையான விரோதம் உண்டு என்பதனை நான் நன்கு அறிவேன். கேள்வி எழுப்பியமைக்காகவும், தேவாலய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியமை தொடர்பிலும் முண்பாடு நிலவுகின்றது.
இந்த விடயத்தை உங்களினால் மறைக்க முடியாது. என்னையும் சில மத குருமாரையும் நீங்கள் பார்க்கும் போது நடந்து கொள்ளும் விதம் குறிப்பாக உங்களது உடல் மொழி மூலம் இந்த விடயம் வெளிச்சமாகின்றது.
நீங்கள் சில மத குருமாரிடம் பகிரங்கமாகவே எங்கள் மீதான வெறுப்பினை வெளியிட்டிருக்கின்றீர்கள். நீங்களும் உங்களது ஆலோசகர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா?
உங்களது ஆலோசகர்களில் ஒருவர் ஒரு தடவை அல்ல பல தடவை இதனைக் கூறியுள்ளார். “சிலர் கூட துள்ளுராங்க அவங்களுக்கு இருக்கு”. உங்களுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசமான மதகுருவே இதனைக் கூறினார்.
அவர் என்னையும் சில மதகுருமாரையும் கொல்லப் போகின்றாரா?
நீங்கள் அவர்களுக்கு உடந்தையா?
அவர்களுக்கு இதற்கான உதவிகளை வழங்குகின்றீர்களா?’
இவ்வாறு அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, அண்மையில் மரணமடைந்த மற்றொரு பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாமோ என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்தப் பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று பலராலும் சந்தேகம் எழுப்பப்ட்டிருந்தபோதும், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஆயர் அனுமதி மறுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பிட்ட அந்தப் பாதிரியார் மரணமடைவதற்கு முந்தைய நாள் ஆயருக்கும் பாதிரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெறிருந்ததாகவும், ஆயர் அந்தப் பாதிரியாரை கடுந்தொணியில் மிரட்டி எச்சரித்திருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அத்தோடு ஆயரில்லத்தில் நடைபெறுகின்ற பல மோசடிகள், ஊழல்கள் பற்றியும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக பல பாதிரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அந்த ஆயர் மீது பல தரப்புக்களால் சுமத்தப்பட்டுவருவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள்.
மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மதக் கட்டமைப்புக்கள் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்பன, கடவுள் மீதான மக்களின் நம்பிக்கையையே வலுவிழக்கச்செய்யும்படியானவைகள் என்கின்றதை தவறு விடுகின்றவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
சமூகத்தை வழிநடாத்தவேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள மதத் தலைவர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.