காணாமல்போன 11இலட்சம் தரவுகள்! உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - சபையில் கோரிய எதிர்க்கட்சித் தலைவர்
பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் கடமைகளை நிறைவேற்றுகின்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல்போனமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு தொடர்பிலான தீர்மானமிக்க காலப்பகுதியில் காணாமல் போயுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல் போயுள்ளது.
அதற்கு முழுப் பொறுப்பையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநர் மீது தவறைத் திணிப்பது அதனை நலினப்படுத்தும்.
இதன்மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான அவதானமிக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.