134 மில்லியன் ரூபாவைக் கடந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிடைத்த வருமானம் 134 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் இந்த வருமானம் கிடைத்ததாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் (Ministry of Transport & Highways) பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அவர் நேற்று (13) அறிவித்திருந்தார்.
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தல்
இந்தநிலையில் எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்தும் வசதி மே 1 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இதன் முன்னோடித் திட்டம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொட்டாவ மற்றும் கடவத்தை பரிமாற்றங்களில் வங்கி அட்டைகள் மூலம் சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
