இன்று நள்ளிரவு முதல் ரைஸ் - பிரியாணி விலை அதிகரிப்பு!
நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் 25 ரூபாவினால் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டி வகை
அத்தோடு லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஹர்ஷன ருக்ஷான், சுமார் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும் தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை ஐந்து ரூபாவினாலும் மற்றும் பால் தேநீரின் விலை பத்து ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சிற்றுண்டி வகைகளின் விலைகள் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |