வவுனியாவில் இந்திய அரசின் நிவாரண அரிசி பதுக்கல் விவகாரம் : ஒரு வருடமாகியும் தீர்வின்றி தொடரும் விசாரணை

Vavuniya Government Of India India
By Kathirpriya Jan 01, 2024 05:27 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இந்திய அரசினால் வவுனியா மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் ஒரு தொகை பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது.

அதன்படி, மக்களுக்கென இந்திய அரசினால் வழங்கப்பட்ட அரிசியில் 1,276 கிலோகிராம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வரும் இந்த பிரச்சினை குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி

விசாரணை தொடர்பான விபரங்கள்

அந்த விசாரணைகளின் விபரத்தினை வவுனியா பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட போது, மாவட்ட செயலகத்தால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவ் விசாரணை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இந்திய அரசின் நிவாரண அரிசி பதுக்கல் விவகாரம் : ஒரு வருடமாகியும் தீர்வின்றி தொடரும் விசாரணை | Rice Hoarding In Vavuniya Provided By Indian Gov

மேலும், மாவட்ட செயலகத்திடம் இருந்து விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றால் குறித்த விடயத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை

கரையோரப் பாதையின் புகையிரத அட்டவணையை இன்று முதல் திருத்தியமைக்க நடவடிக்கை

மேலதிக பரிசோதனைகளுக்காக

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தின் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1,276 கிலோகிராம் நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் இந்திய அரசின் நிவாரண அரிசி பதுக்கல் விவகாரம் : ஒரு வருடமாகியும் தீர்வின்றி தொடரும் விசாரணை | Rice Hoarding In Vavuniya Provided By Indian Gov

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வடக்கில் 6 மாதங்களுக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்: வடக்கு காவல்துறை மா அதிபர் உறுதி

வடக்கில் 6 மாதங்களுக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்: வடக்கு காவல்துறை மா அதிபர் உறுதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025