நாய்,பூனை கூட சாப்பிடாத மாணவர்களுக்கென சீனா வழங்கிய அரிசி -பகிரங்க குற்றச்சாட்டு (காணொளி)
இலங்கையில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு என சீனா வழங்கிய அரிசி தரமற்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அரிசியை சமைத்த பின்னர் அது றபர் களி போல இழுபடுவதாகவும் அதை உட்கொண்ட மாணவர்களுக்கு வயிற்று பிரச்சினைகள் வருவதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாய் மற்றும் பூனைக்கு அந்த சமைத்த சோற்றை போட்டாலும் அவை கூட அதனை மணந்துவிட்டு செல்வதாகவும் இவ்வாறான அரிசியை எப்படி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கியுள்ளீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் -சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதனை காணொளி வாயிலாக காணலாம்...
Serious concerns are being raised over the quality of the rice that is being distributed as Chinese Aid. Did the govt of SL do any inspections to ensure quality control ? pic.twitter.com/aBbiisdUNv
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) December 28, 2022