பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

Thai Pongal Sri Lanka Rice
By Harrish Jan 10, 2025 10:39 AM GMT
Report

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டமானது மன்றாசி நகரிலுள்ள வர்த்தகர்களால் இன்று (10.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அரிசி தட்டுப்பாடு

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தைப்பொங்கல் வருகின்றது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகின்றது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.

பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள் | Rice Shortage Sri Lanka Upcountry People Protest

கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டு வருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம், சுமை தாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன.

எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. 

ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51வது நினைவேந்தல்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51வது நினைவேந்தல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016