ரிஷிசுனக்கின் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
4 பேர் கைது

இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த பாதுகாப்பு படை காவல்துறையினர் கைதானவர்களிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
