பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள பதற்ற நிலைமை: கேள்விக்குறியாகியுள்ள இலங்கை அணியின் பாதுகாப்பு
பிரித்தானியாவில் (UK) ஆரம்பமாகவுள்ள இலங்கை-இங்கிலாந்து (SL vs Eng) டெஸ்ட் தொடருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் வெடித்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரத்தின் மத்தியில் பாதுகாப்பு நிலைமை குறித்து இலங்கை ஆண்கள் அணி கவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு துணை ஊழியர்களை கொண்டு குழுவிற்கு லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு மைதானத்திற்குச் சென்று வரும்போது, அடுத்த சில நாட்களில் சிறந்த பாதுகாப்பை ஏற்பாடு செய்யுமாறு SLC கேட்டுக் கொண்டுள்ளது.
அணியின் பாதுகாப்பு
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை(ECB) இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதியளித்துள்ளது.
இதன் படி, குறித்த தொடரில் இலங்கை அணியின் தலைவராக தனஞ்செய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் குசல் மென்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்
இதேவேளை, தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.
2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும், 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |