மேலும் உயர்ந்தது கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை
srilanka
Corona
Recovered
By MKkamshan
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 340 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 542,212 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,880 ஆக அதிகரித்துள்ளது.