கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
srilanka
corona
Recovered
Deaths
By MKkamshan
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 312பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 515,183 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில் 545,256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,856 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் இருந்து 226,969,246 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.