கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ரிஷாட் பதியுதீன் தீர்மானம்!
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக தம்மை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று (01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் இலாபங்களுக்காக
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளருடன் இணைந்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக அவர்களைக் கைது செய்து 5 வருடங்களுக்கு சிறையில் வைத்திருக்க உத்தேசித்துள்ளார்.

இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவருக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறும் அவர் அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததனால், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல்
இத்தகைய ஒரு குற்றச்செயலைப் புரிந்ததற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக" அவர் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்