16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை ஒடுக்குவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க அமைச்சர்கள் ஜனவரியில் ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை விவாதம் தொடக்க நிலையில் உள்ளதோடு இவை பின்பற்றப்படாமலும் போகலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம்
இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கமிலா மார்ஷல், குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.
பரிசீலனையில் உள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இணையத்தில் மக்களை - குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாக்க, பயனருக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பை அதிகரிக்க பிரித்தானியா சமீபத்தில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
பிரிட்டிஷ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகப்புத்தகத்தில் (Facebook) இல் அனுமதிப்பது குறித்து தேசிய குற்றவியல் நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளைசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |