இலங்கையில் உயர்வடைந்த பணவீக்கம்: நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
இரண்டரை வருடங்களுக்கு தொடரும் பணவீக்கம்
இலங்கையின் தற்போதைய பணவீக்கம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரித்துள்ள பணவீக்கம் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். விசேடமாக தொழில் இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவை ஏற்படும் சூழலில் வருமானம் குறைந்த கீழ் மட்ட மக்கள் கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொள்வார்கள்.சிறிய வர்த்தகர்கள், அன்றாடம் உழைக்கும் மக்கள் எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,