நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! (காணொளி)
Corona
Warning
People
SriLanka
Asela Gunawardena
By Chanakyan
Courtesy: ஏ.ஜீவிதா
நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
அதன்படி அநுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வைபவங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகள் போன்றவற்றில் பொது மக்கள் ஒன்று கூடுவதனை முடிந்த வரையில் தவிர்க்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.