யாழில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான ஹயஸ் வாகனம் - மூவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Accident
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹயஸ் ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (22.2.2025) காலை யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You May Like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
