தலையில் துப்பாக்கியை வைத்து மாணிக்கல் கல் வியாபாரியின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை
லக்கல -தேவலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்க கல் வியாபாரி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத ஐந்து பேர், கோடீஸ்வர வர்த்தகர் அவரது மனைவி மனைவியின் தந்தையின் கை, கால்களை கட்டி வைத்து விட்டு ஏழு கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் பணம் மற்றும் காரை திருடிச் சென்றுள்ளதாக லக்கல காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று 10 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட கார் இன்று 11ஆம் திகதி காலை கலேவெல காவல்துறை எல்லைக்குட்பட்ட தலகிரியாகம பிரதேசத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.
பணம், தங்கப் பொருட்கள் மற்றும் இரத்தினக்கல்
லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இரத்தினக்கல் வர்த்தகரான பொடி ரோஹன என்ற சுசந்த பிரதீப் குமார என்பவரிடமிருந்து சுமார் மூன்று கோடி பெறுமதியான பணம், தங்கப் பொருட்கள் மற்றும் இரத்தினக்கல் என்பன திருடப்பட்டுள்ளதாக லக்கல காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொழிலதிபர் இரவு 09 மணியளவில் வீட்டிற்கு வந்தவேளை வீட்டின் முன் உள்ள புத்தரை வழிபட்டுக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புற சுவரில் இருந்து குதித்து, அவரது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து, அவரது கைகளை கட்டி மற்றும் வாயை சலோரேப் மூலம் ஒட்டி அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
கை, கால்களை கட்டிவிட்டு கொள்ளை
பின்னர் மனைவி மற்றும் அவரது தந்தையின் கை, கால்களை கட்டிவிட்டு கொள்ளைச் சம்பவத்தை செய்துவிட்டு காருடன் தப்பிச் சென்றதாக காவல்துறையில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கார் கண்டுபிடிப்பு
வீதியில் கைவிட்டுச் சென்ற காரை 'கியோ' என்ற காவல்துறை மோப்பநாய் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோப்ப நாய் உதவியுடன் தேடுதல்
பின்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு சிறிது தூரத்தில் நாய் நின்றதாகவும், சந்தேக நபர்கள் அந்த இடத்தில் தங்கியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரதான வீதியூடாக சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சென்ற இந்த மோப்ப நாய் மற்றுமொரு கிளை வீதியில் நின்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை விசாரணைகளுக்காக தம்புள்ளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |