நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் ரோஹன விஜேவீரவின் மகன்
இலங்கையின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் (Rohana Wijeweera) புதல்வர் உவிந்து விஜேவீர போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாம் தலைமுறை அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது அவர் குருநாகல் (Kurunegala) மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை முழுமையாக ஒழுங்கமைத்து வருகிறார்.
நாமல் ராஜபக்ச போட்டி
இதன் அடிப்படையில் அவர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), குருநாகல் மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அது உண்மையான தகவல் இல்லையென நாமல் தரப்பினால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அது அரசியல் தந்திரோபய ரீதியில் மறுக்கப்பட்ட தகவல் என்றும், குருணாகலில் நாமல் போட்டியிடுவதே திட்டம் எனவும் பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |