மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக ரொஹந்த அபேசேகர நியமனம்
இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர (Rohantha Abeysekera) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுசந்த பெரேராவை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வாரங்களாக பொது முகாமையாளரை நீக்கக் கோரி பொறியாளர் சங்கம் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேராவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக தற்போது சுசந்த பெரேராவை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிவந்த, சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.