ஜாம்பவான்களை பின்தள்ளி ரோகித் சர்மா படைத்த சாதனை
ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணி கப்டன் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா.
இதன்படி உலகின் சிறந்த கப்டன்களாக அறியப்படும் ரிக்கி பொண்டிங் (அவுஸ்ரேலியா), ஹன்சே குரோனியே (தென்னாபிரிக்கா), ஸ்டீவ் வோஹ் (அவுஸ்ரேலியா), விராட் கோலி (இந்தியா), டோனி (இந்தியா) ஆகியோரை முந்தி ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மூன்று வகை கிரிக்கெட்டிலும் அதிக வெற்றி சதவீதம்
டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் கப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா கப்டனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் கப்டனாக அவரது நூறாவது போட்டி ஆகும். கப்டனாக தனது நூறாவது போட்டியில் 87 ஓட்டங்கள் அடித்து இங்கிலாந்து அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரோஹித் சர்மா.
இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் கப்டனாக நூறு போட்டிகளில் 74வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் கப்டனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் கப்டனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்கள் வருமாறு,
ரோஹித் சர்மா - 74 சதவீதம் ரிக்கி பொண்டிங் - 70.5 சதவீதம் ஆஸ்கார் ஆப்கன் ( Afghanistan) - 69.6 சதவீதம் ஹன்சே குரோனியே - 67 சதவீதம் .ஸ்டீவ் வோஹ் - 66.6 சதவீதம்

இந்திய அணியின் கப்டனாக இருந்தவர்களில், விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடனும் டோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்