ஒரே நாளில் இரு சாதனை படைத்த ரோகித் சர்மா..! முதல் இடத்தில் கோலி
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 10000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராக ரோகித் சர்மா பதிவாகியுள்ளார்.
இந்த பட்டியலில் இந்த அணியின் சக வீரர் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கின்றார்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கிரக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா இந்த மைல்களை எட்டியுள்ளார்.'
13,000 ஓட்டங்களை பெற்ற வீரர்கள்
அத்துடன் 13,000 ஓட்டத்தை கடந்த 3வது இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.
இதற்கு முன்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சச்சின் டென்டுல்கர் சௌரவ் கங்குலி ஆகியோர் இதுவரை 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர்களாக காணப்படுகின்றனர்.

அதேவேளை,இன்று(12) இடம்பெற்று கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆசிய கோப்பை ஆட்டத்தின் போது 5000 ஒருநாள் பார்ட்னர்ஷிப் ஓட்டங்களை குவித்த எட்டாவது ஜோடியாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளங்குகின்றனர்.
10000 ஓட்டங்களை மிக வேகமாக எடுத்தவர்கள்
விராட் கோலி - 205 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா - 241 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 259 இன்னிங்ஸ்
சவுரவ் கங்குலி - 263 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் - 266 இன்னிங்ஸ்