மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வாகன இறக்குமதிக்கு அனுமதி
இலங்கையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, திங்கட்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைசச்சரவை அங்கீகாரம்
அமைச்சரவை அனுமதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணமின்றி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிக கட்டணத்திற்கு உட்படாத மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொதுப்பயன்பாட்டு வாகனங்களின் இறக்குமதிக்கு அமைசச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
எனினும், மோட்டார் வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதுவரை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
