ரோஹிதவின் மகளுக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று (31) அவர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardena) மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று (30) வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹிதவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன (Rochelle Abeygunawardena) கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தனவின் கணவர் தனுஸ்க வீரக்கொடி (Dhanushka Weerakkody) தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
