ரணில் பக்கம் தாவிய மொட்டுவின் பிரதிநிதி: குவியும் ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) அறிவித்துள்ளார்.
களுத்துறையில் (Kalutara) இன்று (04) காலை இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டத்திற்கு தாம் தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரணிலின் வெற்றி
மேலும், களுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரோஹித அபேகுணவர்தனவின் ஊடக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அவர் உழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவரது ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |