கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!
Cristiano Ronaldo
Lionel Messi
By pavan
ஐரோப்பிய கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக அதிக கோல்கள் அடித்த சாதனையை தற்போது மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
தற்போதைய கால்பந்தாட்ட உலகில் தலைசிறந்த வீரர்களாக மெஸ்ஸியும், ரொனால்டோவும் உள்ளனர். இவர்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இருவரில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட சாதனையை படைக்கும் போது அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்ப்பார்கள்.
ரொனால்டோ சாதனை
இந்த சூழலில், ஐரோப்பிய கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 701 கோல் அடித்திருந்தார். இந்த நிலையில் மெஸ்ஸி 702 கோல்கள் அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதேவேளை, ரொனால்டோவை விட 105 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி
குறித்த சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி