சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் பிரபல நட்சத்திர கால்பந்து வீரர்
Cristiano Ronaldo
Football
FIFA World Cup
Portugal
By Sumithiran
அடுத்த ஆண்டு FIFA உலகக் கோப்பை தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று போர்த்துகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ கிளப் மற்றும் நாட்டிற்காக 950 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
கால்பந்தில் இருந்து ஓய்வு
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரிரு ஆண்டுகளில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கூறியுள்ளார். இன்று (11) சவுதி அரேபியாவில் ஊடகங்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தகவலைவெளியிட்டார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் 2026 போட்டிக்கு போர்த்துகல் இன்னும் தகுதி பெறவில்லை, ஆனால் வியாழக்கிழமை அயர்லாந்தை வீழ்த்தினால் அவர்கள் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்