யாழில் தொடரும் சுற்றிவளைப்புகள்! போதை பொருட்களுடன் கைதான இருவர்!
விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்யப்படுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
காவல்துறையினர் விசாரணை
ஊர்காவற்றுறை காவல்துறையினர் பிரிவின் ஆழுகைக்குள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பலர் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனாலும் சிலர் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
விற்பனைக்கு தயாராக குறித்த போதைப் பொருட்களை வைத்திருந்தபோதே வேலணை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த இருவர் கைதாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்னிலையில் தமக்கு நாச்சிக்குடாவில் இருந்தே போதைப்பொருள் கிடைப்பதாக குறித்த இருவரும் காவல்துறையினரின் விசாரணையின் போது தெரிவித்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த இருவரும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |