விரைவில் இறுக்கமான நடைமுறை - முடிவுகளை அறிவித்தார் வடக்கு ஆளுநர்

Jeevan Thiyagaraja Northern Province of Sri Lanka Accident
By Vanan Nov 06, 2022 02:19 PM GMT
Report

தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை ஒவ்வொரு நாளும் A-9 வீதியில் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று (5) வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பதில் வழங்கிய அவர்,

வழித்தட அனுமதி சோதனை

விரைவில் இறுக்கமான நடைமுறை - முடிவுகளை அறிவித்தார் வடக்கு ஆளுநர் | Route Permit Buses Long Distance Service Check

குறித்த விபத்து தொடர்பில் காவல்துறை மற்றும் ஏனைய தரப்புகளிடம் விசாரணை அறிக்கையினை கேட்டுள்ளேன்.

இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

அதாவது யாழ்- கொழும்பு மற்றும் ஏனைய தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் வடக்கு மாகாணத்திற்குள் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் வழித்தட அனுமதியினை பரிசோதிப்பது என்று.

A-9 வீதியில் ஏதோ ஒரு இடத்தில், பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு ஒரு முயற்சியினை எடுத்துள்ளோம்.

ஒவ்வொரு மாத கடைசியிலும் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் தரப் பரிசோதனையினை உறுதிப்படுத்தும் பரிசோதனையினையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

பயணத்திற்கான நேரக் கட்டுப்பாடு

விரைவில் இறுக்கமான நடைமுறை - முடிவுகளை அறிவித்தார் வடக்கு ஆளுநர் | Route Permit Buses Long Distance Service Check

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கான நேரக் கட்டுப்பாடு ஒன்றினையும் விதிப்பதற்கு உள்ளோம்.

எனவே அனைத்து விடயங்களும் இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் உரையாடி முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் வடக்கில் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026